காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ஜம்பு மகரிஷி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
காஞ்சிபுரம், நவ.19:
படவிளக்கம் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் தலைமையில் ஜம்பு மகரிஷி கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் வேலாத்தம்மன் கோயில் தெருவில் ஜம்பு மகரிஷிக்கென தனி சந்நிதியாக புதியதாக திருக்கோயில் கட்டப்பட்டிருந்தது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை மாலையில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை வேலூர் சைவ சித்தாந்த பேரவை அன்பர்களால் தொடங்கப்பட்டன. 2வது நாளாக ஞாயிற்றுக்கிழமை பூரணாகுதி தீபாராதனைகள் முடிந்து கோயில் ராஜகோபுரத்துக்கு புனித நீர்க்குடங்கள் எடுத்து செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
![]() |
| மூலவர் ஜம்பு மகரிஷி |
கும்பாபிஷேகத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் கோயில் மூலவரான ஜம்பு மகரிஷிக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஏற்பாடுகளை ஆலய ஸ்தாபகர் ஜெ.சங்கரன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர். இதனையடுத்து பேரொளி வழிபாடும்,அ ன்னதானமும் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவில் கோயிலை வடிவமைத்த ஸ்தபதி ஆர்.சசிகுமார் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.


No comments
Thank you for your comments