Breaking News

WC மைதானத்தில் பாலஸ்தீன ஆதரவாளர் நுழைந்ததால் பரபரப்பு

அகமதாபாத், நவ.19-

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி  அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது..  முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி பேட் செய்துவந்த நிலையில்   பாதுகாப்பை மீறி பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் ஆடுகளத்தினுள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடித்தார்.


அந்த நபர் அணிந்திருந்த மேலாடையில் ‘Free Palestine’ மற்றும் ‘Stop - Bombing Palestine’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு தனது பாலஸ்தீன கொடியை தனது முகக் கவசமாகவும் அவர் அணிந்திருந்தார்.  ஸாம்பா வீசிய 14-வது ஓவரின் போது அந்த நபர் களத்துக்குள் நுழைந்தார். அப்போது கோலி மற்றும் ராகுல் பேட் செய்தனர். அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கைது செய்து வெளியேற்றினர்.

கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினர், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,200 பேரை படுகொலை செய்தனர்.  இதில் மிகப் பெரும்பான்மையானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவர். இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்துள்ளது. 

அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


No comments

Thank you for your comments