காஞ்சீபுரத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் - வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் பரிதாபம்
காஞ்சீபுரம், நவ.30-
காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
சாலைகளில் கால்நடைகள்
காஞ்சீபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கால்நடைகளை வளர்ப்போர் சாலைகளில் தன்னிச்சையாக சுற்றித் திரிய விட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு திருவண்ணாமலையில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போன்று பலரது கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்ப்பமாக உள்ள பசுக்கள் மட்டும் உரியவர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை தெரிவித்தும் வந்தது.
கூட்டம், கூட்டமாக...
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானம், அரசு மருத்துவமனை சாலை,விளக்கொளிப் பெருமாள் கோவில் தெரு, காந்தி சாலை,காமாட்சி அம்மன் கோவில் சந்நிதி தெரு ஆகிய பகுதிகளில் கால்டநைகள் கூட்டம்,கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
விபத்தில் சிக்குகிறார்கள்
காஞ்சீபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி கால்நடைகளின் உரிமையாளர்கள் அதனை சாலைகளில் சுற்றித் திரிய விடுவது பொதுமக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வருகிறது.
இதனால் வாகனங்களை ஓட்டிச் செல்வோர்களும் விபத்துக்கு உள்ளாகி விடுகின்றனர். எனவே கால்நடைகளை பறிமுதல் செய்வதோடு நில்லாமல் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அதிக தொகை அபராதமாகவும் விதித்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
No comments
Thank you for your comments