Breaking News

காஞ்சிபுரத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்


வடகிழக்கு பருவமடையானது தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது இந்த நிலையிலே காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாலை முதல் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் இரவு வரை தொடர்ந்து மழையானது தீவிரமடைய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமானது அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் வரை  காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையானது கொட்டிதீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலே மழைநீர் ஆனது ஆங்காங்கே தேங்கி நின்று வருகிறது.

இந்த நிலையிலே  காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்மேடு அருந்ததிபாளையம் பகுதியில் மழை நீரானது அப்பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து சுமார் இரண்டு அடிக்கு மேல் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து இருக்கின்றது ஒரு சில வீடுகளிலே புகுந்து அந்த நீரை அவர்களாகவே அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளிவர முடியாது தவித்து வருகின்றனர். மேலும் அதனுடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றமான வீசி சுகாதார சீர்கேடானது ஏற்பட்டு வருகின்றது. என் உயிரிலே அப்பகுதி மக்களும் அங்க இருக்க கூடிய குழந்தைகளும் அந்நீரிலேயே கால் வைத்து செல்லக்கூடிய அவல நிலையானது ஏற்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் பருவ மழை அல்லாத நாட்களில் கனமடையின் போதும் இப்பகுதியிலேயே மழை நீர் ஆனது தேங்குவதும், அதனுடன் கழிவு நீரும் கலந்து தேங்குவது வாடிக்கையாகவே இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மேலும் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலே தொடந்து கனமழை பெய்தால் இப்பகுதியிலேயே மேலும் மழைநீரானது வரக்கூடும் அப்படி வரும் பட்சத்தில் வீடுகளினுள் மழைநீர் ஆனது புககூடும் இதனால் இரவு நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலையில் உள்ளதாக என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

No comments

Thank you for your comments