Breaking News

ஆக்ஜிலியம் கல்லூரியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு

வேலூர் :

வேலூர் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்  பேரில் 1-வது மண்டலத்திற்கு உள்பட்ட 10-வது வார்டு ஆக்ஜிலியம் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட மாணவிகள் இடையே  டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர்.மார்க்ஸ் கேஸ்ட்ரோ விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


வீட்டின் மொட்டை மாடியில் , மற்றும் சுற்றியுள்ள இடங்களில் பயன் படாத பொருட்கள் ஆகிய டயர், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டல்கள், உரல்கள் இதுபோன்ற  பொருட்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் எனவும், வீட்டில் உள்ள பிரிட்ஜில் பின்புறம் தண்ணீர் தேங்கும் அதிலும் கொசுக்கள் உற்பத்தியாகும் வாரத்திற்கு ஒருமுறை  சுத்தம் செய்யும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும், என்றார்.

மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்,

No comments

Thank you for your comments