ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் குறைதீர்க்கும் முகாமில் 133 மனுக்களுக்கு தீர்வு
திருவள்ளூர் :
இம்முகாமில் காவல் ஆணையர் கி.சங்கர் தலைமை வகித்தார். இதில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, நசரத்பேட்டை, போரூர், எண்ணூர், மீஞ்சூர், செவ்வாப்பேட்டை, மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்வு காணப்படாத நில அபகரிப்பு, பண மோசடி, சைபர் குற்றங்கள், குடும்ப வன்முறைகள் உள்ளிட்டவை தொடர்பாக 47 புகார் மனுக்களை கொடுத்தனர்.
இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆணையர் சங்கர், உரிய அதிகாரிகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில் தமிழக முதல்வரின் முகவரியில் அனுப்பப்பட்ட 133 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
இம்முகாமில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, செங்குன்றம் காவல் துணை ஆணையர் .பாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments