மகளிர் திட்டம் மூலம் பாலின வள மையம் என்ற வானவில் மையத்தை கலெக்டர் திறந்துவைத்தார்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள பெறுங்கோழி ஊராட்சியின் வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில், மகளிர் திட்டம் மூலம் பாலின வள மையம் என்ற வானவில் மையம் இன்று (20.11.2023) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
இந்த மையத்தில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல் ஆகியவைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இலவச சட்ட உதவி மற்றும் உடனடி உதவிக்களுக்காக குறுகிய கால தங்கும் வசதியுடன் கூடிய அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் 044 - 27272714 என்ற உதவி தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.க.கவிதா, உத்திரமேரூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.ஹேமலதா ஞானசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய வள பயிற்றுனர்கள், உள்ளாட்சித்துறை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments