9 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க 11.30 லட்சத்திற்கான கடனுதவி ஆணைகளை வழங்கினார் ஆட்சியர் கலைசெல்வி மோகன்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, 9 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க 11.30 லட்சத்திற்கான கடனுதவி ஆணைகளை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (20.11.2023) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. \
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 358 கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மேலும், 9 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க 11.30 லட்சத்திற்கான கடனுதவி ஆணைகளை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து, மங்கோலியா நாட்டில் நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற திருமதி.அமுதசுகந்தி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.




No comments
Thank you for your comments