Breaking News

விதிகளை மீறி இயங்கும் வாகனங்களின் மீது சிறப்புத்தணிக்கை

தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி இயங்கும் அனைத்து வாகனங்களின் மீதும் சிறப்புத்தணிக்கை - தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவு....



இன்று 25.11.2023 தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் மற்றும் சென்னை தெற்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் அவாகியோர்களின் உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தினகரன் தலைமையில் மோட்டர் வாகன ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் அவர்கள், காஞ்சிபுரம், வாலஜபாத் மற்றும் உத்திரமேரூர் பகுதியில் அணைத்து வகையான வாகனங்களையும் இன்று திடீர் ஆய்வு செய்து எட்டு சரக்குவாகனகள், ஒரு தனியார் கம்பெனி வாகனம், இரண்டு மேக்சி கேப், ஒரு இலகுரக சரக்குவாகனம் (குட்டி யானை) ஆகியவைகளுக்கு ரூபாய் 2,99,000/- (இரண்டு லட்சத்து தொண்ணூற்று ஒன்பதாயிரம்) அபராதம் விதித்தனர். 

மேலும் தகுதிச்சான்று மற்றும் சாலை வரி கட்டாத ஒரு லாரி மற்றும் தகுதிச்சன்று இல்லாமலும் சரக்கு எற்றும் பகுதியில் ஆபத்தான முறையில் ஆட்களை ஏற்றி வந்த இலகு ரக சரக்கு வாகனத்தையும் சிறைபிடித்து வாலஜபாத் காவல் நிலையத்தில் ஒப்படத்தும் நடவடிக்கை எடுத்தனர்.

No comments

Thank you for your comments