மீண்டும் மக்கள் பணியில் காஞ்சிபுரம் மாநகராட்சி 27 ஆவது வார்டு கவுன்சிலர் ஷாலினிவேலு
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளில் உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இதில் 27 ஆவது வார்டு கவுன்சிலராக திருமதி ஷாலினி வேலு கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் ஜாதி சான்றிதழை போலியாக சமர்ப்பித்ததாக காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் போட்டி வேட்பாளர் வழக்கு தொடர்ந்து நிலையில் , விசாரணைக்கு உரிய பதில் அளிக்காததால் நீதிபதி செம்மல் அம்மா மன்ற உறுப்பினர் பணி செய்ய அவர்கள் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து ஷாலினி வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவர் பணி செய்ய எந்தவித தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு நகலை இன்று ஷாலினி வேலு ஆணையாளர் செந்தில்குமரனை சந்தித்து நேரில் வழங்கினார்.
மீண்டும் மக்கள் பணி செய்ய நீதிமன்றம் உத்தரவு அளித்தது தொடர்ந்து உடன் செயலாற்றும் கவுன்சிலர்கள் அவருக்கு சால்வை அறிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாமன்ற உறுப்பினர் ஷாலினி, நீதிமன்றம் அளித்த வாய்ப்பை திறன் பட மீண்டும் மக்கள் பணி செய்ய பயன்படுத்துவேன் என தெரிவித்தார்.
No comments
Thank you for your comments