Breaking News

வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் - அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலெக்டர் ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்,  திருமதி. சோ.மதுமதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 பணிகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இன்று (25.11.2023) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், திருமதி. சோ.மதுமதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 பணிகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 04 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருப்பெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சந்தவேலூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரம் நகரம் அந்திரசன் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பார்வையிட்டார். மேலும், மேற்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு முறைத் திருத்த முகாம் பணிகள் குறித்து, வாக்காளர் பதிவு அலுவலர்கள்/வட்டாட்சியர்கள் ஆகியோர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இவ் ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments