காஞ்சிபுரத்தில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா
காஞ்சிபுரம் :
திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
படவிளக்கம் : வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்கள்
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருநாளையொட்டி திராளான பக்தர்கள் பூக்காவடி,பன்னீர்க்காவடி ஆகியனவற்றை எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்த மூலவரை தரிசித்தனர்.காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.மாலையில் வள்ளி,தெய்வானை சமேதராக முருகப்பெருமான் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் கச்சேபுசவரர் கோயிலில் கார்த்திகை மாத 2 வது கடைஞாயிறு நாள் மற்றும் திருக்கார்த்திகையையொட்டியும் திரளான பக்தர்கள் தலையில் மண் சட்டியில் மாவிளக்கு சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்,பக்தர்கள் ரூ.5 மற்றும் ரூ.20 கட்டணம் செலுத்தி வரிசையில் சென்று கச்சபேசுவரரை தரிசித்தனர். ஆலய நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு கோயில் வரலாற்று குறிப்பு துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது.வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாகவும் பக்தர்களுக்கு தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் திருக்கார்த்திகையையொட்டி மகா பெரியவர் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகமும்,பின்னர் வெள்ளி வேல் சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தொடக்கி வைத்தார்.திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
No comments
Thank you for your comments