Breaking News

சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள் - காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள்

 காஞ்சிபுரம், நவ.9-

தீபாவளிப் பண்டிகையை சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும்,விபத்து இல்லாமலும் கொண்டாடி மகிழுமாôறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டார்.



காஞ்சிபுரத்தில் பல்வேறு பட்டாசு விற்பனைக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார்.ஆட்சியரது ஆய்வின் போது எஸ்பி எம்.சுதாகர்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.ஆய்வுக்குப் பின்னர் ஆட்சியர் மேலும் கூறியது..



மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாளாகும்.அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம்,நீர்,காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடாமலும்,பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால் குழந்தைகள்,முதியோர்கள்,நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் உடல் அளவிலும்,மனதளவிலும் பாதிக்காத வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் பேணிக்காப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

பசுமைப்பட்டாசுகளை மட்டுமே விற்கவும் வெடிக்கவும் வேண்டும்.அரசு அறிவித்துள்ளபடி காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கவும்,விற்கவும் கூடாது.எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்க கூடாது. பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால் வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.எனவே பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடாதீர்கள்.எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளுக்கு அருகிலோ,பட்டாசு விற்கும் கடைகள் அருகிலோ சென்று பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

பட்டாசு விற்பனையாளர்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ,பெட்ரோமாக்ûஸயோ அல்லது சிம்னி விளக்குகளையோ கடையிலோ அல்லது கடைக்கு அருகிலோ பயன்படுத்தக்கூடாது.பட்டாசுகளை வெடிக்கச் செய்ய நீளமான ஊதுபத்திகளையும்,கால்களில் செருப்பு அணிந்தும் பட்டாசு வெடிப்பது நல்லது. பாதுகாப்பு கண்ணாடி அணிவது,பருத்தி ஆடைகளை அணிவது,கம்பி மத்தாப்புகள் பயன்படுத்திய பிறகு நீர் நிரம்பிய வாளிகளில் அதை மூழ்கடிப்பது ஆகியவை விபத்துக்களை தவிர்க்கும்.ராக்கெட் மற்றும் அவுட்டு போன்ற வெடிகளை திறந்த மைதானத்தில் மட்டுமே வைத்து வெடிக்க வேண்டும்.பறக்கும் தன்மையுள்ள பட்டாசுகளாக இருந்தால் காற்று அதிகம் வீசும் நேரங்களில் வெடிக்கக்கூடாது.

கால்நடைகள் அருகில் பட்டாசுகளை வெடிப்பதால் அவை மிரண்டு ஓடும் போது வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் மீதும் முட்டி மோதி விபத்து நேரிடலாம்.எனவே அதை தவிர்க்க வேண்டும்.தங்களது செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அதை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பதன் மூலமும் விபத்துக்களை தவிர்க்கலாம். தீ விபத்துக்களால் எற்படும் பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே குழந்தைகளுக்கு பெற்றோர்களும்,ஆசிரியர்களும் எடுத்துரைக்க வேண்டும். பெற்றோர்கள் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசு வெடிக்கச் செய்ய வேண்டும்.போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள்,பொதுமக்கள் அதிகமாக கூடியிருக்கும் இடங்கள்,சாலையின் மையப் பகுதிகள் ஆகியனவற்றில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.ரயில் மற்றும் பேருந்துகளில் கண்டிப்பாக பட்டாசுகளை எடுத்துச் செல்லக் கூடாது.

எதிர்பாரதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் 101,அவசர காவல் உதவி எண்கள் 100,112 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.பொதுமக்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றியும்,அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாகவும்,மகிழ்ச்சியாகவுó தீபாவளியை கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கேட்டுக்கொண்டார்.

படவிளக்கம்}காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் அருகில் உள்ள பட்டாசுக் கடையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

No comments

Thank you for your comments