Breaking News

காஞ்சிபுரத்தில் களைகட்டிய மது விற்பனை.. நேற்று ஒரே நாளில் ரூ. 9 கோடி வசூல்

  • காஞ்சிபுரம் மண்டலத்தில் தீபாவளியை ஒட்டி நேற்று ஒரே நாளில் ரூ.9 கோடி டாஸ்மாக் வசூல்
  • ராஜாஜி மார்க்கெட் அருகாமையில் உள்ள டாஸ்மார்க் கடையில் சாலையிலேயே அமர்ந்து மது பிரியர்கள் குடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி


தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, இனிப்புகள், புத்தாடை, அசைவ விருந்து, நொறுக்கு தின்பண்டங்கள் உள்ளிட்ட போய் ஏராளமான வாங்கி தீபாவளியை பல்வேறு விதமான கொண்டாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

தீபாவளி நேரங்களில் விற்பனையாகும் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி கொண்டாடு வரும் சூழ்நிலையில் மது பிரியர்கள் தீபாவளிக்கு என்று டாஸ்மாக் கடைகளில் அதிக வசூல் சாதனை படைத்து வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு என்று விற்பனையில் ஒவ்வொரு ஆண்டும் அதிக வசூலை ஈட்டி தந்து வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்திற்கு என கொண்டாடி மகிழ்ந்து மதுவை பிரியர்கள் மதுவையும் குடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் 100 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதி அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையில் பண்டிகை நாட்களில் அதிக மதுக்கள் விற்பனை ஆகும் நிலையமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மது பிரியர்கள் இந்த ஆண்டு இப்பகுதியில் மதுக்களை வாங்கி அதே பகுதியில் அமர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மண்டல டாஸ்மார்க் விற்பனையாகத்தில் மதுபாட்டில்கள் நேற்று ஒரே நாளில் 9 கோடி ரூபாய் விற்பனை  ஆகியுள்ளதாக தகவல்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு நோன்பு தினமான இன்று பல்வேறு பகுதி மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக விளங்கும் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் மது பிரியர்கள் காலையிலேயே மதுவை வாங்கி சாலையிலேயே அமர்ந்து குடிப்பதால் அவ்வழியே பொதுமக்கள் செல்ல முடியாமல் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. 

மேலும் டாஸ்மார்க் கடை அருகாமையில் உள்ள கடைகளில் விற்பனையாக முடியாமல் மது பிரியர்கள் அங்கே அமர்ந்து குழுவாகவும் நின்று மதுவை அருந்துவதால் கடை உரிமையாளர் தீபாவளி தினத்தன்றுகூட பொருட்கள் விற்பனையாக முடியாமல் விற்பனையில் மந்தநிலையை ஏற்பட்டு வருவதால் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அதிக மக்கள் கூடும் இடமாக விளங்கும் பழமையான ராஜாஜி மார்க்கெட் அருகாமையில் உள்ள கடையை அகற்றி வேறு இடத்தில் மாற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் அப்பகுதி சாலையிலே அமர்ந்து மது குடிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.

No comments

Thank you for your comments