Breaking News

தொண்டு நிறுவனங்கள் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் நலனில் அக்கறை உள்ள அமைப்புகள், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

2023-24ம் ஆண்டில் மாவட்டத்திலுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பது தொடர்பாக பத்திரிக்கையில் செய்தி வெளியிடுவது:

 காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் நலனில் அக்கறை உள்ள அமைப்புகள், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றித் திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும், காயமடைந்த மற்றும் நோய் வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசரசிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி (Ambulance) கொள்முதல் செய்திடவும், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு உறைவிடம் (Animal Shelter) கட்டுவதற்கும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை (Animal Birth Control) மற்றும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதி உதவி கோரி விண்ணப்பம் செய்யலாம்.

கால்நடைகளின் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் நிதி உதவி பெற்றிட https://cms.tn.gov.in/sites/default/files/announcement/ahf-TNAWB-041122.pdf என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் காஞ்சிபுரம், கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநரிடம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments