தொழில் நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைப்பு - காஞ்சி கலெக்டர் கலைசெல்வி
காஞ்சிபுரம் :
தொழில் நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்களிப்பு வழங்குகின்றன. தொழில் நுட்ப ஜவுளித் துறை ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்றும், 2030 ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப்பில் 45 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் தொழில்நுட்ப ஜவுளித் துறை நேரடியாக 12 லட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 50 லட்சம் நபர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.
இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) மூலமாக வருகிற 17.11.2023 மற்றும் 18.11.2023 ஆகிய தேதியில் கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் லீமெரிடியனில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, ஒன்றிய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஆகியவை இணைந்து தொழில் நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளது.
மேற்படி கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் தொழில் நுட்ப ஜவுளி துறையில் உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி, புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்குகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வதற்கான இணையதள இணைப்பு (https://bit.ly/CIITechnicalTextiles). மேற்படி கருத்தரங்கில் ஜவுளி தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மண்டல துணை இயக்குநர்
திருமதி.எஸ்.அம்சவேணி – 9443943450
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்,
துணிநூல் துறை,
1A-2/1, சங்ககிரி மெயின் ரோடு குகை, சேலம் – 636 006.
அலுவலக தொலைபேசி எண். -0427-2913006.
Office Email id – ddtextilessalemregional@gmail.com
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
.jpg)
No comments
Thank you for your comments