Breaking News

காஞ்சிபுரத்தில் : இஸ்ரேலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி பதாகை ஏந்தி முழக்கம்

காஞ்சிபுரம் :

பாலஸ்தீன மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்திய இஸ்ரேலை கண்டித்து காஞ்சிபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி பதாகை ஏந்தி முழக்கமிட்டனர்.


தமிழகம் முழுவதும் ஜிம்மா தொழுகை முடித்து விட்டு பாலஸ்தீன மருத்துவமனை மீது இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதை கண்டித்து பதாகை ஏந்தி முழக்கம் நடக்கிறது. 

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம்  மாவட்டம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி  துணைத்தலைவர் சர்தார் தலைமையில் காஞ்சிபுரம் தேரடி  பள்ளிவாசல் அருகில் தொழுகை முடித்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டிக்கும் விதமாக முழக்கம் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரிப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கண்டிக்கும் விதமாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி கோஷங்களை முழக்கமிட்டர்.

பாலஸ்தீனில் தினந்தோறும் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் இஸ்ரோலை கண்டித்து பதாகைகளை எழுதியவர் எஸ்டிபிஐ கட்சி நகர் 50க்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல் வெளியே கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

No comments

Thank you for your comments