Breaking News

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர்க்கான வேலை வாய்ப்பு உள்ளிடட 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம்  ஊராட்சியில்  உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம்  அரசு தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் அஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.  இதில் சிறப்பு பார்வையாளராக விஷ்ணுபிரியா,  உதவி திட்ட அலுவலர் (வீடுகள்)   பங்கேற்றார்.  


ஊராட்சி வளர்ச்சி சார்ந்த  நீர்நிலைகள் பராமரிப்பு, திட, திரவக் கழிவு மேலாண்மை,  நெகிழி ஒழிப்பு, வேளாண்மை, பள்ளிக் கல்வி, குழந்தைக் கல்வி மற்றும் நலன், தூய்மை மற்றும் பசுமை கிராமம், இளைஞர் மற்றும் மகளிர்க்கான வேலை வாய்ப்பு உள்ளிடட 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

 பற்றாளர் திரு , வட்டார வளர்ச்சி அலுவலர் ந. காஞ்சனா, துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் இரா. சாந்தி, ஞானவேல், பூபதி, சூரியகாந்தி மற்றும் கற்பகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் எல்லப்பன், பாளையம் ரவி, பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள் இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

சிறப்புப் பார்வையாளர் விஷ்ணுபிரியா அவர்கள் பேசுகையில் இந்த கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தும் ஊராட்சி வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் வகையில் உள்ளது. 

ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்ததுடன், உங்களுடன் பங்கேற்றது தனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பாராட்டினார்.

No comments

Thank you for your comments