Breaking News

22ம் தேதி அன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக முன்னோட்ட கருத்தரங்கம்

காஞ்சிபுரம் :

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக காஞ்சிபுரத்தில்  முன்னோட்ட கருத்தரங்கம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்   கலைச்செல்வி மோகன்  தகவல் தெரிவித்துள்ளார்.


பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் நிகழ்வாக தமிழ்நாடு அரசு ஜனவரி 2024, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024, சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்கு முன்னோட்டமாக வரும் 22ம் தேதி மாலை 3.00 மணிக்கு, பல்லவாஹால், சத்யம் கிராண்ட் ரிசார்ட்ஸ், சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை, திருப்பெரும்புதூரில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கில் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் கலந்துக்கொண்டு தலைமையுரை மற்றும் விழாப்பேரூரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் அவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் ஆகியோர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துரையாற்ற உள்ளனர். 

மாவட்ட ஆட்சியர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர், அரசு செயலர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகியோர் கலந்துக்கொண்டு தொழில் முதலீடுகள் குறித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.

இக்கூட்டத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் வணிக நிறுவன சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துக்களை கூற உள்ளனர். 

தொழில் நிறுவனங்கள் தொடங்கவும் தொய்வின்றி நடத்துவதற்கு அரசின் நடைமுறைகள், அரசுதரும் ஆதரவுகள், தொழில்நுட்ப, நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உரிய ஆளுமைகள், வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உரை நிகழ்த்துகின்றனர்.

தொழில்துறையினர், வணிகர், தொழில்முனைவோர், கைவினைஞர், தொழில் வல்லுநர்கள். ஆலோசகர்கள், சுயதொழில் ஊக்குநர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி. கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

செ.வெ.எண். 649  /  நாள். 20.11.2023

No comments

Thank you for your comments