கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை - காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம், திருப்புக்குழி கிராமத்தை சேர்ந்த தேன்மொழி என்வரின் கணவர் முருகன். இவருக்கும், திருப்புட்குழி வள்ளலார் தெருவை சேர்ந்த தொப்பையப்பன் மகன் நரசிம்மன் என்பவருக்கும் ஏற்பட்ட நிலத்தகராறில் நரசிம்மன், முருகன் என்பவரை கொலை செய்யும் முயற்சியோடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இது சம்மந்தமாக பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் குற்றவாளியை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரில், தற்போதைய பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிவாசன், நீதிமன்ற பெண் தலைமை காவலர் உஷா, காஞ்சிபுரம் சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் அன்பு ஆகியோர் தனிக்கவனம் செலுத்தினர்.
இந்த வழக்கில் குற்றம் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதால், காஞ்சிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி திருஞானசம்பந்தம், குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று (31-10-2023) உத்தரவிட்டார்.
இவ்வழக்கில், எதிரிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினர்.
No comments
Thank you for your comments