குமரகோட்டம் முருகன் கோயிலில் 4 ஜோடிகளுக்கு திருமணம், சீர் வரிசைப் பொருட்களை அறநிலையத்துறை வழங்கியது
காஞ்சிபுரம், நவ.24:
காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை 4 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
படவிளக்கம் : குமரகோட்டம் முருகன் கோயிலில் நடைபெற்ற 4 ஜோடி திருமணத் தம்பதிகளுடன் அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன்பாரதி
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ரா.வான்மதி,உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் கட்டில், பீரோ, 4 கிராம் தங்கக்காசு, பட்டுவேட்டி, பட்டுச்சேலை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களையும் அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவர் எஸ்.தியாகராஜன், அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் ப.முத்துலட்சுமி, அமுதா, ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ரா.வான்மதி கூறுகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் குமரகோட்டம் முருகன் கோயிலில் 4, திருநீர்மலையிலும், திருவிடந்தையிலும் தலா 2,குன்றத்தூரில் 3 உட்பட11 திருமணங்கள் அறநிலையத்துறையால் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஒரே ஆண்டில் காஞ்சிபுரம் மண்டலத்தில் மட்டும் இதுவரை 29 திருமணங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.ஒரு திருமணத்திற்கு மொத்தமாக ரூ.70 ஆயிரம் வரை செலவிடப்டுவதாகவும் ரா.வான்மதி தெரிவித்தார்.
No comments
Thank you for your comments