Breaking News

காஞ்சிபுரம் சுழற்சங்கம் சார்பில் ரூ.25லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

காஞ்சிபுரம், நவ.20-

காஞ்சிபுரம் மாவட்ட சுழற்சங்கம் சார்பில் ரூ.25லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட சுழற்சங்கம் சார்பில் அதன் மாவட்ட ஆளுநர் பி.பரணீதரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காந்தி சாலை பெரியார் தூண் அருகில் நடைபெற்றது. 

பெப்சி.சீனிவாசன், சங்க மாவட்ட செயலாளர் பி.சம்பத், நலத்திட்ட உதவிகள் பிரிவின் தலைவர் சாய்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க மக்கள் தொடர்பு அலுவலர் ஜி.முருகேஷ் வரவேற்று பேசினார். விழாவில் சுழற்சங்கத்தின் மாவட்ட முன்னாள் ஆளுநர் அபிராமி ராமநாதன், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

விழாவில் மகாபலிபுரம் சுழற்சங்கத் தலைவர் மகேஷ்குமார், மாவட்ட பொருளாளர் பூபதி, திருவள்ளூர் மாவட்ட தீபம் சுழற் சங்க தலைவர் கார்த்தி, செயலாளர் விடிவீ கோபி மற்றும் முகிலன் ஆகியோர் உட்பட சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆளுநர் பி.பரணீதரன் பேசுகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 175 சக்கர நாற்காலிகள் மற்றும் கோயில்களுக்கு 25 உட்பட மொத்தம் 200 சக்கர நாற்காலிகள், 25 பேருக்கு தையல் இயந்திரங்கள், சாலையோரமாக கடை நடத்தும் வியாபாரிகள் 6 பேருக்கு தள்ளுவண்டிகள் என மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் ரூ.2 கோடி மதிப்பில் இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொள்ளும் மருத்துவமனை கட்டிடம் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

படவிளக்கம்}அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய சுழற்சங்க மாவட்ட ஆளுநர் பி.பரணீதரன்,முன்னாள் ஆளுநர் அபிராமி ராமநாதன் மற்றும் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்

No comments

Thank you for your comments