Breaking News

திமுக சார்பில் 200 பேருக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, மிதிவண்டி வழங்கல்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பேரூர் திமுக சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்  க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.  பேரூர் செயலாளர் என்.எஸ். பாரிவள்ளல் முன்னிலை வகித்தார்.  ஒன்றிய கழக செயலாளர் ஞானசேகரன் அனைவரையும் வரவேற்றார். 

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி. செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து 200 பேருக்கு தையல் இந்திரம் இஸ்திரி பெட்டி மிதிவண்டி விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏழை எளியவர்களுக்கு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க‌.செல்வம்,தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன்,ஒன்றிய செயலாளர்  டி. குமார், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர்-பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், ஒன்றிய குழு துணை தலைவர் வசந்தி குமார்,பேரூராட்சி துணை தலைவர் இளமதி கோவிந்தராஜன் , உள்ளிட்ட  உள்ளாட்சிப் பிரதிநிதிகள்  ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments