Breaking News

23-11-2023-ம் தேதி ராசி பலன்கள்



மேஷம்

விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பாராட்டு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 

அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

பரணி : திருப்பங்கள் ஏற்படும்.

கிருத்திகை : வாய்ப்புகள் கைகூடும்.


ரிஷபம்

விவசாயப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். பெற்றோர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கட்டிடம் சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். அசதி விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : பயணங்கள் ஈடேறும்.

ரோகிணி : லாபம் மேம்படும்.

மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும். 

மிதுனம்

தொழில் தொடர்பான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உறவினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளும், உற்சாகமும் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும். 

திருவாதிரை : தெளிவு பிறக்கும்.

புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.

 

கடகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். சொத்துக்களை விருத்தி செய்வது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பரிவு வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

பூசம் : முடிவு கிடைக்கும்.

ஆயில்யம் : முயற்சிகள் ஈடேறும்.


சிம்மம்

சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமற்ற சூழல் ஏற்படும். சிக்கலான சில செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரப் பணிகளில்  மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் :  இழுபறியான நாள்.

பூரம் : பொறுமையுடன் செயல்படவும்.

உத்திரம் : புரிதல் மேம்படும். 



கன்னி

நுட்பமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பாடுகளில் மாற்றங்களைச் செய்வீர்கள். போட்டித் தேர்வுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தைக் கையாளவும். நீண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த நபர்களைச் சந்திப்பீர்கள். சிந்தனையில் புதிய தெளிவும், உற்சாகமும் ஏற்படும். இரக்கம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் :  மாற்றங்களைச் செய்வீர்கள். 

அஸ்தம் : விவேகத்தைக் கையாளவும்.

சித்திரை : உற்சாகமான நாள்.


துலாம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். புதுவிதமான பயணங்கள் உண்டாகும். உதவி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.

சுவாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

விசாகம் : பயணங்கள் உண்டாகும்.

விருச்சிகம்

கைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் :  மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : புரிதல் உண்டாகும்.

கேட்டை : அனுபவம் வெளிப்படும்.


தனுசு

இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சமூக வாழ்க்கையில் ஒத்துழைப்பு மேம்படும்.  உடல் ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நிம்மதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மூலம் : குழப்பங்கள் மறையும்.    

பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும். 

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும். 



மகரம்

வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். தானியம் தொடர்பான விற்பனையில் லாபம் மேம்படும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். எதிர்ப்பு குறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : லாபம் மேம்படும்.

திருவோணம் : கவனம் வேண்டும்.

அவிட்டம் : போட்டிகள் விலகும். 


கும்பம்

எதிலும் முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளைக் குறைத்துக் கொள்ளவும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : பொறுமையை கடைபிடிக்கவும். 

சதயம் : மாற்றம் ஏற்படும். 

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.



மீனம்

வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புரிதலும், அனுபவமும் மேம்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஊக்கம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 

ரேவதி : அனுசரித்துச் செல்லவும்.

No comments

Thank you for your comments