Breaking News

காஞ்சிபுரத்தில் இலவச கணினி கணக்கியல் பயிற்சி - நவ.15ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

காஞ்சிபுரம், நவ.8:

காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் டேலி எனப்படும் இலவச கணினி கணக்கியல் பயிற்சி வகுப்புக்கு நவம்பர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என அப்பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர்.உமாபதி புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் சந்நிதி தெருவில் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.இம்மையத்தில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் ஆண்,பெண் இருபாலருக்கும் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.பயிற்சி மையத்தின் சார்பில் இலவசமாக கணினி கணக்கியல் (டேலி)பயிற்சி வகுப்பு தொடங்குகிறோம். 

இப் பயிற்சி வகுப்பில் 18 முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்,12 ஆம் வகுப்பும் அதற்கு மேலும் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.வரும் நவம்பர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

பயிற்சி வகுப்பு 30 நாட்கள் நடைபெறும்,தினசரி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு நிறைவு பெறும். பயிற்சியின் போது ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு மதிய உணவு,இடை வேளையின் போது தேநீர், பிஸ்கட் மற்றும் சீருடை, பயிற்சிக் கையேடுகள் மற்றும் உபகரணங்கள்,தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள், சுய தொழில் தொடங்கிட ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

இப்பயிற்சியைப் போல செல்போன் பழுது நீக்கும் பயிற்சியும்,பெண்களுக்கு தையல் பயிற்சியும் அழகுக்கலை பயிற்சியும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் இந்த இலவசப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்கள் அனுப்பவும் மேலும் விபரங்களுக்கும் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம், வரதராதப் பெருமாள் கோயில் சந்நிதி தெரு,காஞ்சிபுரம், பின்கோடு -  631501 என்ற முகவரியிலும் தொலைபேசி எண் - 044}27268037 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறும் ஆர்.உமாபதி கேட்டுக்கொண்டார்.

No comments

Thank you for your comments