100க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்றிணைந்து ஆயுத பூஜை கொண்டாட்டம்
- ஸ்ரீபெரும்புதூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து ஆயுத பூஜை கொண்டாட்டம்.....
 
- அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் சீருடை வழங்கி மகிழ்ந்த நாம் தமிழர் கட்சியினர்....
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பஸ் நிலையம், ராஜீவ் காந்தி நினைவகம், தேரடி, சிவன்தாங்கல், நெமிலி ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.
இந்த ஆட்டோ ஸ்டாண்டுகளில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் ஒன்று சேர்ந்து இன்று நூற்றுக்கணக்கான ஆட்டோக்களை ஒன்றாக நிறுத்தி வைத்து மாலை அணிவித்து அலங்காரம் செய்து கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்து மிகவும் ஆரவாரத்தோடு உற்சாகமாய் ஆயுத பூஜை கொண்டாடினர்.
இங்கு ஆயுத பூஜை கொண்டாடிய அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீருடை வழங்கி மகிழ்வித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
  
No comments
Thank you for your comments