Breaking News

112 பயனாளிகளுக்கு ரூ.12.39 கோட கல்வி கடன் உதவி ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்

 காஞ்சிபுரம்  :

இன்று (22.11.2023) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில்  தனியார் பொறியியல் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து 112 பயனாளிகளுக்கு ரூ.12.39 கோடிக்கான  கடனுதவி ஆணைகளை வழங்கினார்.


மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து கடனுதவி ஆணைகளை வழங்கி பேசியதாவது:

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன், 33 பொறியியல் கல்லூரிகளில், 30,903 மாணவர்களும், 16 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 11,988 மாணவர்களும், 15 தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6456 மாணவர்களும், 5 மருத்துவக் கல்லூரிகள், 17 பாராமெடிக்கல் கல்லூரிகளில் 17,100 மாணவர்களும் என ஆக மொத்தம் 86 கல்லூரிகளில், 66,447 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 3,170 மாணவர்களுக்கு ரூ.155 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது‌. 2023-24 நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 608 மாணவர்களுக்கு, ரூ.58.99 கோடி கல்விக்கடனாக அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பி.இ., எம்.பி.பி.எஸ்., நர்சிங், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு கல்வி கடன்கள் வழங்கப்படுகிறது. கல்விக்கடனானது இந்தியாவிற்குள் பயிலும் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும், வெளிநாடுகள் சென்று பயிலும் மாணவர்களுக்கு ரூ.1.50 கோடி வரை வழங்கப்படுகிறது. இதில் ரூ.7,50,000 வரை எவ்வித உத்திரவாதம் இன்றி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு, பெரும் கல்வி கடனை மாணவர்கள் 15 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தலாம்.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலமாக கல்வி கடன் பெற மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "Vidhyalakshmi Portal" (www.vidhyalakshmi.co.in) குறித்து மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "Education Loan Mela" நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை மூலமாக அறிவுரைகள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து "Vidhyalakshmi Portal" குறித்த பதிவு முறைகளை எடுத்துரைத்ததோடு அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சென்று "Vidhyalakshmi Portal" குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு வங்கிகள் மூலமாக Spot Registration மேற்கொள்ள அனைத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள் மூலமாக இன்றைய தினம் 112 பயனாளிகளுக்கு ரூ.12.39 கோடிக்கான கடனுதவி ஆணைகள் வழங்கப்படவும் உள்ளது. எனவே, இவ்விழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்,இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சங்கீதா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர்               திரு. ராஜாராமன்,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் திரு.சிக்ரிலால், உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments