Breaking News

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் இன்று ஹேண்ட் இன் ஹேண்ட்  இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.




இவ்விழாவிற்கு பச்சையப்பன் மகளிர் கல்லூரி முதல்வர் கோமதி தலைமை தாங்கினார், ஒன்றிய மேலாளர்கள் கோவிந்தன் பொண்ணு வேல் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர், முன்னதாக முதுநிலை திட்ட மேலாளர் நம்பிராஜி வரவேற்புரை ஆற்றினார். 

இந்நிகழ்வில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நமது தலைமை நமது நல வாழ்வு பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த வராதைகளை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் வெளியிட்டு குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு ஓவியம் மற்றும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.


ஹேண்ட் இன் ஹேண்ட் கலைக்குழு சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை சார்ந்த பணியாளர்கள் குழந்தைகள் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் களப்பணியாளர்கள் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக முதன்மை மேலாளர் கிருபாகரன் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments