Breaking News

தேசிய நெடுஞ்சாலையில் பல்கர் லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து கடும் பாதிப்பு



சென்னை என்னூர் துறைமுகத்தில் இருந்து 40 டன் எடை கொண்ட சிமெண்ட் மூலக்கூறு பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி பல்கர் லாரி சென்று கொண்டிருந்தது 

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 6 வழி சாலையாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாற்று சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் லாரி திரும்பிய போது மேடு பள்ளத்தின் காரணமாக லாரியின் பின்பக்கம் இருந்த டேங்கர் பகுதி மட்டும் தனியே கழன்றது 

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சென்டர் மீடியனில் மோதி நின்றது பாரம் தாங்க முடியாமல் தனியே வந்த டேங்கர் பகுதி சென்டர்மீடியன் மீதே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை போலீசார் மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாபடி சாலையில் தடுப்பு அமைத்து வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பல்கர் லாரி சென்டர் மீடியனில் மோதி சென்டர் மீடியனில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments