மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்ய கோரி புகார் மனு
தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார்.
படப்பை, சென்னக்குப்பம், வல்லம் , மாத்தூர் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார், மாத்தூரில் இருந்து புறப்பட்டு செல்லும் போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளரிடம் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.
அதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபி 10 கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்ததாக கடந்த ஆண்டு வங்கி கையொப்பம் இடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் பறித்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கோபியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா விடம் புகார் அளித்தனர்.
மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் மனு அளித்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தலைமை செயலாளரிடம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர் தான் உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பாளர் அவர் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என தெரிவித்தார்
ஆய்வு மேற்கொள்ள வந்த தலைமை செயலாளரிடம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் அளித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments
Thank you for your comments