Breaking News

காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் நகரும் இலவச கழிப்பறை வசதி - சுழற் சங்க ஆளுநர் தகவல்

காஞ்சிபுரம், அக்.22:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திசாலையிலும், வட்டாட்சியர் அலுவலகம் அருகிலும் தலா ரூ.4 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகரும் வகையில் இரு இலவச கழிப்பறை வசதி தொடங்கப்பட இருப்பதாக சுழற்சங்க மாவட்ட ஆளுநர் பரணீதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

படவிளக்கம் : காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகரும் இலவசக் கழிப்பறை(உள்படம்) சுழற்சங்க ஆளுநர் பி.பரணீதரன்

இது குறித்து.  காஞ்சிபுரத்தில் கலைஞர் பவள விழா மாளிகையில் சுழற்சங்க ஆளுநர் பி.பரணீதரன்  கூறியதாவது :-

திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு சுழற் சங்க ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். 7 மாவட்டங்களிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் 50 கி.மீ.ஒரு இடத்தில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக நகரும் இலவச கழிப்பறைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதற் கட்டமாக காஞ்சிபுரத்தில் மக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களான காந்தி சாலை,வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இரு இடங்களிலும் தலா ரூ.4லட்சம் மதிப்பில் இலவசக் கழிப்பறை வசதி தொடங்கப்படவுள்ளது. இக்கழிப்பறைகளை தேவைப்படும் இடத்துக்கு மாற்றியும் வைத்துக் கொள்ளலாம்.

பட்டுச்சேலைகள் வாங்கவும், கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும் சில முக்கிய நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் வருகிறார்கள். அவர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுவதை உணர்ந்து மாநகரில் முக்கிய இடங்களில் இக்கழிப்பறை வசதியை தொடங்கியுள்ளோம். கழிப்பறைகளில் காற்றோட்ட வசதி, மின்சார வசதி, போதுமான இட வசதி, குளித்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 அரசுப்பள்ளிகளிலும்,காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியிலும் இலவசக் கழிப்பறை வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எனது ஆளுகைக்கு உட்பட்ட 7 மாவட்டங்களிலும் உள்ள 150 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா இரண்டு இருசக்கர வாகனங்கள் விரைவில் வழங்க இருப்பதாகவும் பி.பரணீதரன் தெரிவித்தார்.பேட்டியின் போது சுழற்சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.ன


No comments

Thank you for your comments