தீபாவளி சீட்டு மோசடி செய்தவர் ஜவுளி கடையை சூறையாடிய பொதுமக்கள்
- தீபாவளி பண்டு சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் ஆட்டைய போட்டவரின் ஜவுளி கடையை சூறையாடி வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- காஞ்சிபுரம் முருகன் காலணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களிடம் சுமார் 700பேரிடம் 1000ரூபாய் வீதம் 20மாதங்கள் கட்டினால் 30,000 தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி மோசடி
- சீட்டு பணம் மோசடி செய்த பாலகிருஷ்ணன் என்பவரை அழைத்து சென்று தாலுகா போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முருகன் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 40. அவருடைய மனைவி சங்கீதா. நெசவாளர்கள் நிறைந்த பகுதியான முருகன் காலனி பகுதியில் வீட்டிலேயே நெசவு செய்யப்படும் கைத்தொழில் தறி நெசவாளகளிடமிருந்து பாலகிருஷ்ணன் பட்டு புடவை வாங்கி சிறிய அளவில் பட்டுஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இது மட்டுமல்லாமல் பாலகிருஷ்ணன் அப்பகுதி மக்களிடம் மாதம் ஆயிரம் ரூபாய் பணம் கட்டி வந்தால் 20 வது மாத கடைசியில் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறியுள்ளார்.பாலகிருஷ்ணன் அதே பகுதியில் வசிப்பவர் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து ஏராளமான மக்கள் அவரிடம் சீட்டு கட்டி வந்தனர்.
இதுவரை ஏழு குழுக்கள் என அமைத்து ஒரு குழுவுக்கு 100 பேர் வீதம் தலா 700 நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளார்.சீட்டு பணம் கட்டிய நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பணம் கிடைத்துவிடும் தீபாவளியை கொண்டாட்டம் மகிழ்வானதாக இருக்கும் என எண்ணி பாலகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்தனர்.
பாலகிருஷ்ணனிடம் பணத்தைப் பற்றி கேட்டபோது அங்கே முதலீடூ செய்திருக்கேன் இங்கே முதலில் செய்திருக்கிறேன் என பொய்யான தகவல்களை கூறியதால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பாலகிருஷ்ணனின் வீட்டுக்கு அருகே உள்ள பட்டு சேலை கடையை அடித்து நொறுக்கினர்.
பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தப்பி ஓட திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது அதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாலகிருஷ்ணன் சங்கீதா தம்பதிகளை அவர்களின் வீட்டிலேயே அடைத்து வண்ணம் வெளியில் அவரது வீட்டை முற்றுகையிட்டிருந்தனர்.பாலகிருஷ்ணன் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் குவிந்தததால் அப்பகுதி மக்களிடையே ஒருவித பதற்றம் ஏற்பட்டது.
தகவலை கேள்விப்பட்ட தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர். முன்னதாகவே போலீசார் வந்தவுடன் அவருடைய வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணனை காவல்துறையினர் மீட்டு எஸ் பி அலுவலகம் கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இவ்விசாரணையில் பாலகிருஷ்ணன் பணத்தை சுழற்சி முறையில் மாற்றி அளித்து வந்ததும் இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பாலகிருஷ்ணன் மீது 420 வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.அதே போல் அவனது மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ள நிலையில் அவர்களுக்கு இரண்டரை வயதில் ஓர் குழந்தை உள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவித்திடவும் திட்டம் உள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது , நாங்கள் எல்லாம் வறுமை கோட்டு கீழே உள்ளவர்கள் மாதாமாதம் பணத்தை கட்டி வந்தோம்.
20 மாதங்கள் முடிந்தால் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக இதுவரை யாருக்கும் பணம் அளிக்கவில்லை , நேற்று முன்தினம் எங்களை போன்ற வாடிக்கையாளர்களை பயமுறுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே பாய்சன் சாப்பிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிக்கு சென்று படுத்துக் கொண்டார்.
அப்படிப்பட்ட நபர் வேறு எங்கும் தப்பி போகக்கூடாது என்ற காரணத்திற்காகவே அப்குதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாலகிருஷ்ணனை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் வாயைக் கட்டி வயிற்றை கட்டி கட்டிய பணமெல்லாம் வீணா போயிட்டே!!! என்று கோபத்தில் தான் அப்பகுதி மக்கள் பாலகிருஷ்ணனின் கடையையும் சேதம் ஆக்கினர்கள் என தெரிவித்தார்.
No comments
Thank you for your comments