வேலூர் பெண்கள் தனி சிறையில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு
வேலூர், அக்.6-
இந்த ஆலோசனையின் போது வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர், தூய்மைப் பணிகள், நிலத்தடி நீர்மட்டம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாநகராட்சி ஆணையாளர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், வேலூர் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளரிடம் சிறைச்சாலையில் சிறைக்கைதிகளில் எண்ணிக்கை குறித்தும், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், சிறைச்சாலையில் உள்ள பள்ளி வசதி, மருத்துவமனை வசதி, மறுவாழ்வு மையம், குடிநீர் வசதி, சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், சிறைச்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை மற்றும் அதனுடைய சேமிப்பு திறன் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, காவல் துறை அலுவலர்களிடம் காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள சிறார் குற்றங்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த வழக்குகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களிடம் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சிறார்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணம் குறித்தும், சிறார் வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அலுவலர்களிடம் மீட்கப்பட்ட குழந்தைகள் தொழிலாளர்களின் விவரம் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறித்தும், காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், பள்ளிகளில் உள்ள ஆய்வக வசதி, குடிநீர், கழிவறை வசதி, மாணவிகளுக்கு வழங்கப்படும் சானிடரி நாப்கின் திட்டம் குறித்தும் கேட்டறிந்தார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை, அதிலுள்ள பணியாளர்கள் எண்ணிக்கை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு உணவின் நாளொன்றுக்கான அளவு மற்றும் குழந்தைகளுக்கு நாள்தோறும் வழங்கப்படும் சத்துணவு மாவு எடையின் அளவு, அங்கன்வாடி மையத்தில் உள்ள கருவிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (05.10.2023) தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால் கிஷன் கோயல் வேலூர் கொணவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணாக்கர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு, பள்ளி மேலாண்மை குழு கூட்ட பதிவேடுகள், மாணவிகளுக்கு வழங்கப்படும் சானிடரி நாப்கின் பதிவேடுகள், சமைக்கப்பட்ட மதிய உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், மாணாக்கர்களிடம் வகுப்பறைக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கான அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் அணுகுமுறை, அவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விழிப்புணர்வு குறித்த சிறப்பு வகுப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வேலூர் பெண்கள் தனி சிறைக்கு சென்று சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் அவர்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் உணவு, சிறைக் கைதிகளுக்கு சிறையில் உள்ள கல்வி வசதி, சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, சமையல் இருப்பறை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, காட்பாடி வட்டம் கசம் பகுதியில் உள்ள முதியோர் பாலர் குடும்ப கிராம பண்ணை இல்லத்திற்கு சென்று அங்கு தங்கியுள்ள முதியோர், சிறுவர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஏதேனும் சிரமங்கள் உள்ளதா எனவும் கேட்டறிந்தார்.
மேலும், இல்லத்தில் முதியோர்களுக்கும், சிறார்களுக்கும் அளிக்கப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் ஆய்வு செய்து செவிலியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பி.இரத்தினசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, வருவாய் கோட்டாட்சியர் ர.க.கவிதா, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் செல்வி.வினோலியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சஞ்சீத் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments