Breaking News

வேலூரில் கஞ்சா பதுக்கியவர் கைது

வேலூர், அக்.6-

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கஞ்சா கடத்துபவர்கள், விற்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், நேற்று வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கருகம்பத்தூர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டபோது ராகுல் என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.15,000/- மதிப்புடைய 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


No comments

Thank you for your comments