மாநில அளவிலான விளையாட்டு : வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் தேர்வு
காஞ்சிபுரம் :
மாநில அளவிலான விளையாட்டுக்களுக்கு வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பெண்கள் அணி 17 வயதிற்குட்பட்ட ஹாக்கி பிரிவு, 19 வயதிற்குட்பட்ட கால்பந்தில் 14 வயதிற்குட்பட்ட பிரிவினர் மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவினரும் தேர்வு பெற்றுள்ளனர்.
இதையடுத்து மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு இவர்கள் தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் அணியினருக்கும் பயிற்சியாளருக்கும் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் பாராட்டுக்களை தெரிவித்தார்.
No comments
Thank you for your comments