களப்பணியில் தேவரியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் காவல் படை மாணவர்கள்
தேவரியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் காவல் படை (SPC-Student Police Cadet) மாணவர்கள் இன்று களப்பணி செய்தனர்.
பள்ளியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலாமாகப் புறப்பட்ட இவர்கள், வழியில் கனரக வாகனங்கள் செல்வதை முறைப்படுத்துதல், இருசக்கர வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும், தலைக்கவசம் அணிய வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின் ஊராட்சியின் திடக்கழிவு மேலாண்மை வளாகத்திற்கு சென்று அங்குள்ள துப்புரவு பணியாளர்களிடம் மட்கும் குப்பை மற்றும் மட்கா குப்பைகள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகின்றன என்பதை ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர்.
இப்படை மாணவ மாணவியருக்கு இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் அதை செறிவூட்டும் வகையில் மண்புழு உரமாக மாற்றுதல் மற்றும் அந்த உரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் விளக்கினார்.
பின் 100 நாள் பணியாளர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் குறுங்காட்டையும், அதில் நேரம் மற்றும் தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்க பயன்படுத்தும் யுக்திகளையும் ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொண்டனர்.
இதில் தலைமையாசிரியர் திருமதி. C. எழில் (cpo) பொறுப்பாசிரியர் திருமதி. K.ரேணுகாதேவி (Acpo) உடன் உடற்கல்வியாசிரியர் L. K. தமிழ்வாணள் ஆகியோர் மாணவர்களை வழிநடத்தி சென்றனர்.
No comments
Thank you for your comments