காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் - பாதுகாப்பு கேட்டு மனு
காஞ்சிபுரம், அக்.6-
காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
காதல்
காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை தொகுதியை சேர்ந்தவர் ராஜ் என்பவர் மகன் ஹரிஷ். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இவரும், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்பவரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
திருமணம்
இந்த நிலையில் ஆர்த்திக்கும், அவரது உறவினர் ஒருவரின் மகன் ஒருவருக்கும் திருமண செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ஆர்த்தியும், காதலனும் திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் ஹரிஷ் வீட்டிற்கு உருட்டு கட்டைகளுடன் வந்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
போலீசில் தஞ்சம்
இந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலே தஞ்சம் அடைந்தனர்.
தங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்குமாறு புகார் மனுவினை மாவட்ட எஸ்.பி.சுதாகரிடம் அளித்தனர்.
No comments
Thank you for your comments