இன்றைய (30-10-2023) ராசி பலன்கள்
மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பணியில் இருந்துவந்த தடைகள் அகலும். உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். சில பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். பெரியோர்களிடம் நிதானம் வேண்டும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
- அஸ்வினி : திருப்தியான நாள்.
- பரணி : தடைகள் அகலும்.
- கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
- கிருத்திகை : தாமதம் ஏற்படும்.
- ரோகிணி : விவேகத்துடன் செயல்படவும்.
- மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை முடிப்பதற்கு அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களுடன் சில நெருடல்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஓரளவு லாபகரமான சூழல் அமையும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிறு பணிகளுக்கும் உடல் உழைப்பு அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
- மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
- திருவாதிரை : பயணங்கள் உண்டாகும்.
- புனர்பூசம் : உழைப்பு அதிகரிக்கும்.
கடகம்: குருமார்களின் ஆசி கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற இன மக்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கமிஷன் சார்ந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். நட்பு மேம்படும் நாள்.
- புனர்பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
- பூசம் : ஒத்துழைப்பான நாள்.
- ஆயில்யம் : புத்துணர்ச்சி பிறக்கும்.
சிம்மம் : செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். தலைமை அதிகாரிகளை பற்றிய புரிதல் ஏற்படும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
- மகம் : துரிதம் அதிகரிக்கும்.
- பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
- உத்திரம் : புரிதல் ஏற்படும்.
கன்னி : திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
- உத்திரம் : ஆதரவான நாள்.
- அஸ்தம் : ஒற்றுமை ஏற்படும்.
- சித்திரை : பயணங்கள் உண்டாகும்.
துலாம்: மனதளவில் ஒருவிதமான கவலைகள் தோன்றி மறையும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. வேலையாட்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் எந்த ஒரு காரியத்தையும் அணுகவும். உத்தியோகத்தில் கூடுதல் பணிகளை பார்க்க வேண்டிய சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.
- சித்திரை : கவலைகள் மறையும்.
- சுவாதி : பொறுமை வேண்டும்.
- விசாகம் : பொறுப்புகள் மேம்படும்.
விருச்சிகம்: திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கைகூடிவரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை துளிர்விடும். வெற்றி நிறைந்த நாள்.
- விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
- அனுஷம் : புரிதல் உண்டாகும்.
- கேட்டை : தன்னம்பிக்கை மேம்படும்.
தனுசு:மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செல்லப் பிராணிகள் மீது ஆர்வம் ஏற்படும். உடனிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடிவரும். சுகவீனம் நிறைந்த நாள்.
- மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
- பூராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.
- உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம்: கேளிக்கை விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வர்த்தக முதலீடுகளில் விவேகம் வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். கலை சார்ந்த விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். காப்பீடு சார்ந்த முதலீடுகளில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான விஷயங்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அரசுப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.
- உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
- திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.
- அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்.
கும்பம்: உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். விவசாயப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
- அவிட்டம் : புரிதல் அதிகரிக்கும்.
- சதயம் : ஆர்வம் ஏற்படும்.
- பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
மீனம்: மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் தைரியம் பிறக்கும். எழுத்து துறைகளில் மாற்றம் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது தோன்றி மறையும். பத்திரத் துறைகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிக்கல் விலகும் நாள்.
- பூரட்டாதி : தைரியம் பிறக்கும்.
- உத்திரட்டாதி : நட்பு விரிவடையும்.
- ரேவதி : தடைகள் விலகும்.
No comments
Thank you for your comments