சூப்பர் மார்க்கெட்டில் சோப் திருடும் நபர்... சிசிடிவி வீடியோ வைரல்
காஞ்சிபுரம் :
- காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் சோப்பு திருடும் நபர்.
- சோப்பை திருடி தனது ஆடைக்குள் மறைத்து எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பிரபல சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.தினந்தோறும் பரப்பாக காணப்படும் சூப்பர் மார்கெட்டில் சுற்று வட்டார மக்கள் ஏராளமானோர் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வங்கி செல்வர்.
இந்நிலையில் சூப்பர் மார்கெட்டுக்கு வந்த ஒரு நபர் பொருட்களை வாங்குவது போல சுற்றி சுற்றி வந்துள்ளார்.
சூப்பர் மார்க்கெட்டில் பல்வேறு பகுதியில் சுற்றித்திரிந்த நபர் குளியலறை சோப்புகள் உள்ள பகுதியில் சென்று அங்கிருந்த சோப்புகளை எடுத்து தான் அணிந்திருந்த பேண்டுக்குள் மறைத்து வைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூப்பர் மார்கெட் பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளாகி உள்ளனர்.
No comments
Thank you for your comments