காஞ்சிபுரத்தில் புதியதாக கட்டப்படும் வேணுகோபால சுவாமி திருக்கோயில் ! - நவ.24-ந் தேதி மகா சம்ப்ரோஷணம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் ஒக்கப்பிறந்தான் குளம் புதுத்தெருவில் பல லட்சம் மதிப்பில் வேணுகோபால சுவாமி பஜனைக் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
பெரியகாஞ்சிபுரம் பகுதியில் ஒக்கப்பிறந்தான் தெருவில் பழையான பஜனைக் கோயிலாக இருந்த வேணுகோபால சுவாமி திருக்கோயில் முழுவதுமாக புதியதாக பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.கோயில் வளாகத்திற்குள் விநாயகர், முருகன் சந்நிதிகளும் தனித்தனியாக கட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்குழுவின் தலைவர் கே.ராஜேந்திரன் கூறியதாவது :-
சுமார் 103 ஆண்டுகளுக்கும் மேற் :பட்ட பழமையான வேணுகோபால சுவாமி பஜனைக் கோயில் தற்போது முழுவதுமாக புதுப்பித்துள்ளோம்.
மூலவராக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள
6 அடி உயர கிருஷ்ணர் சிலை
கோயில் மூலவராக 6 அடி உயரத்தில் கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் அழகிய விக்கிரகமும், விநாயகர், முருகன் சிலைகள் தலா இரண்டேகால் அடி உயரத்திலும் கற்சிலைகள் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
மகா சம்ப்ரோஷணம்
வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா சம்ப்ரோஷணம் நடத்தும் வகையில் நாள் குறித்து அதற்காக திருப்பணிகளை தீவிரப்படுத்தி செய்து வருகிறோம் என்றார்.பேட்டியின் போது கும்பாபிஷேக திருப்பணிக் குழுவின் துணைத் தலைவர்கள் எஸ்.தீனதயாளன்,ஆர்.ராமு,செயலாளர் டி.தயாளன் மற்றும் ஸ்தபதி ஆர்.நந்தகுமார் ஆகியோர் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments