Breaking News

கிராம சபை கூட்டத்தை ஏகனாபுரம் கிராம மக்கள்2-வது முறையாக புறக்கணிப்பு

காந்தி ஜெயந்தி ஒட்டி நடைபெறக்கூடிய கிராம சபை கூட்டத்தை ஏகனாபுரம் கிராம மக்கள் இரண்டாவது முறையாக புறக்கணிப்பு

ஏற்கனவே 6கிராம சபைகளில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களும் நிறைவேற்றம்

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் செவிசாய்க்காத தமிழக அரசை கண்டித்து கிராம சபையை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு



காஞ்சிபுரம் : 

சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையமானது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4750 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.



பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதால் வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, இடையார்பாக்கம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும்  விளைநிலங்களும் பறிபோய்விடும் என கூறி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 434நாளாக நாள்தோறும் பல்வேறு விதமாக  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 434 நாட்களாக போராடிவரும் நிலையில் இதுவரை நடைபெற்ற ஆறு முறை கிராம சபை கூட்டங்களில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர் . ஏற்கனவே ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களை புறக்கணித்த நிலையில்  இரண்டாவது முறையாக இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சி சங்கீதா முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தலைமையில் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் துணை வட்டாட்சியர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் வருவாய் துறை அலுவலர்கள கலந்துகொண்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றன.

இதில் ஊர் பொதுமக்கள் பங்குபெறாமல் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டதால் கிராம சபை கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.

No comments

Thank you for your comments