Breaking News

காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம்

காஞ்சிபுரம் :

காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்துவதுடன் நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற நல்லொழுக்க பயிற்சி முகாமில் தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கூட்டம்

காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் அமைப்பின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.சுலைமான் தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் அப்துல்கரீம்,மாநிலச் செயலாளர்கள் முஹம்மது ஒலி,அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீர்மானம்

பயிற்சி முகாம் நிறைவில், பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும், காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.மேலும் நடமாடும் ரத்த பரிசோதனை வாகனத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன அப்பாவி மக்கள் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டும்,15 ஆயிரம் பேர் காணாமலும் போயிருக்கின்றனர்.மருத்துவமனையில் தங்கி இருந்த போதும் தாக்குதல் நடத்திய இஸ்ரேலை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்திருக்கும் நிலையில் இந்தியா ஆதரவு கூட தெரிவிக்காதது மிகவும் கண்டனத்துக்குரியது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


No comments

Thank you for your comments