Breaking News

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டெல்லி பயணம்

சென்னை, செப்.23-

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இதனை மறைமுகமாக உணர்த்தும் வகையில், இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 


இது தொடர்பாக சமீபத்தில் விளக்கம் அளித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 

"அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க.வின் தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. நான் யாரையும் தவறாக பேசவில்லை," என்று தெரிவித்தார். 

இந்த நிலையில், அ.தி.மு.க.  மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகியோர் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். டெல்லியில் அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறப்படுகிறது.

No comments

Thank you for your comments