காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக உறுப்பினர்கள் எஸ்பியிடம் புகார்
காஞ்சிபுரம், செப்.25:
காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக உறுப்பினராக இருந்து வருபவர் சண்முகநாதன். இவர் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்களான புனிதா சம்பத்,சூரியா தர்மராஜ்,சரஸ்வதி சண்முகம் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட எஸ்பி எம்.சுதாகரை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்து வருபவர் க.கண்ணன், இவரை காஞ்சிபுரம் மாநகராட்சியை கடன் இல்லாத மாநகராட்சியாக மாற்றியிருக்கிறார்.மாநகராட்சி வசமிருந்த 120 நீதிமன்ற வழக்குகளை குறைத்து தற்போது 20 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.
தமிழகத்திலேயே வரி வசூலை அதிகப்படுத்தி மாநிலத்தில் 2 வது இடத்துக்கு காஞ்சிபுரத்தை கொண்டு வந்துள்ளார்.நேர்மையான அதிகாரியாக செயல்படும் இவரைப் பற்றி தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் திமுக பிரமுகரான டில்லிபாபு விமர்சித்தார்.
இதைக் கண்டித்ததால் அதிமுக உறுப்பினரான சண்முக நாதனை அவரது இல்லத்திற்கே வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மாவட்ட எஸ்பி எம்.சுதாகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
No comments
Thank you for your comments