காஞ்சிபுரம் ஆட்சியரிடம் இளைஞர் மருத்துவ உதவி செய்யக் கோரிக்கை
காஞ்சிபுரம்,செப்.25:
![]() |
ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க தனது தாயார் முருகம்மாளுடன் வந்திருந்த முதுகுத்தண்டு வடம் பாதித்த இளைஞர் கே.ஜானகிராமன் |
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே மானாம்பதி விசூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.ஜானகிராமன்(26)வர்ணம் பூசும் கூலித் தொழிலாளியான இவர் கடந்த 7.9.2016 ஆம் தேதி சென்னையில் வீடு ஒன்றில் வர்ணம் பூசிக் கொண்டிருந்த போது கயிறு அறுந்து கீழே விழுந்ததில் முதுகுத்தண்டு வடம் முறிந்தது.
இதனால் எழுந்து நடக்க முடியாமலும்,வாழ வழியில்லாமலும் இருந்து வருகிறார். வேலை செய்த இடத்திலும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. எனவே தனக்கு மருத்துவ உதவி செய்யுமாறும், நிவாரண உதவி வழங்கிடுமாறும் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இவருடன் அவரது தாயார் முருகம்மாளும் உடன் வந்திருந்தார்.
No comments
Thank you for your comments