மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மருத்துவ முகாம் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக 2023-24 ஆண்டிற்கு 0-18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகள் உள்ளடக்கிய வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையுடன் (Samagra Shiksha) இணைந்து கீழ்கண்டவாறு முகாம்கள் நடைபெறவுள்ளது.
1. சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்றத்தூர். நாள்: 05.10.2023
2. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாலாஜாபாத் நாள்: 10.10.2023
3. ராணி அண்ணாதுரை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம். நாள்:12.10.2023
4. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பெரும்புதூர். நாள்:17.10.2023
5. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர். நாள்:19.10.2023
இம்முகாமில் அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டு பயனடையலாம்.
மேலும் இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் குடும்ப அட்டை - நகல், ஆதார் அட்டை - நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் - 4 இம்முகாமில் கலந்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் முகவரியையும், மற்றும் 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும், மாற்றுத்திறனாளிகள் அவசியம் இம்மாபெரும் மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு பயனடையுமாறும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments