திமுக மருத்துவ அணி சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பாக உத்திரமேரூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் வழங்கினார்.
திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு மாதங்களாகவே பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர்.திவாகர் வாசுதேவன் தலைமையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க ன.சுந்தர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினர் . ஆர் .டி அரசு ஆகியோர் கலந்து கொண்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனை மற்றும் எண்டத்தூர் உள்ளிட்ட நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.
மேலும் மருத்துவ அணியில் புதியதாக இணைந்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அடையாள அட்டை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் , பேரூராட்சி தலைவர் சசிகுமார், திமுக மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் ஓவியக்கண்ணன் , பேரூர் செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன் ,எஸ்.கே.இளங்கோவன்,அன்பு செழியன்,ஆறுமுகம்,சிவா,சந்தியா பேரூராட்சி கவுன்சிலர் தனசேகரன் மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)


No comments
Thank you for your comments