Breaking News

டெங்கு கொசு பரவல்களை முதல் நிலையிலேயே அழிக்க நடவடிக்கை - மேயர் மகாலட்சுமி யுவராஜ்

டெங்கு கொசு பரவல்களை முதல் நிலையிலேயே அழிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்து அதற்கான பணிகளை பார்வையிட்டார்.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் கடந்த சில நாட்களாகவே டெங்கு கொசுவின் அதிகரிப்பால் பல்வேறு பகுதிகளில்  பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டு சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு பேர் என அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் டெங்கு கொசுவை முதல் நிலையிலேயே  கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களிடையே ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி கூட தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களைக் கொண்டு அவற்றுக்கான ஆயத்த பணிகளான ,  கொசு தெளிப்பான் இயந்திரங்களை பார்வையிட்டு அவற்றை உடனடியாக தூய்மை பணியாளர்கள் ஒவ்வொரு வார்டாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் இடம்பெற்றுள்ள நான்கு மண்டல பகுதிகளில் ஒரு மண்டலத்திற்கு ஒரு வார்டு என்ற கணக்கில் ஒரு நாளைக்கு நான்கு வார்டு பகுதிகளில் கொசு தெளிப்பான் மருந்து தெளிக்கப்பட்டு விரைவில் அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உடனடியாக கொசுவை  முதல் நிலையிலேயே ஒழிக்க துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் 50 கிலோ மீட்டருக்கு மேலான தெருக்களில் காணப்படும் திறந்தவெளி சிறு கழிவுநீர் கால்வாய்களை தூய்மைப்படுத்த பணிகளில் இதுவரை  30 கிலோமீட்டர் பரப்பளவு உள்ள கழிவுநீர் கால்வாய்களை இதுவரையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நகர் நல அலுவலர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன்,  ஆணையர் கண்ணன், பணிக்குழு தலைவர் சுரேஷ் , மாமன்ற உறுப்பினர் சரவணன் , மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருள்நம்பி மற்றும் நகர் நல ஆய்வாளர்கள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments