சந்திரமுகி, ஜிகர்தண்டா திரைபடங்களின் இரண்டாம் பாகங்கள் வெற்றி பெற காஞ்சி காமாட்சி அம்மன் தரிசிக்க வந்த ராகவா லாரன்ஸ்..
திரைப்பட நடிகர் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி மற்றும் ஜிகர்தண்டா இரண்டாம் பகுதி திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் படம் நிறைவுற்று உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் சங்கரமடம் உள்ள பெரியவர் சிலை மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் படம் வெற்றி பெற சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார்.
காஞ்சி மகா பெரியவர்களாக இருந்த ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் அனுஷ்டானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பூஜைகளில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் படங்கள் வெற்றி பெற சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார்.
ராகவா லாரன்ஸ் திருக்கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் பொதுமக்கள் மற்றும் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் என அனைவரும் அவருடன் செல்பி எடுக்க போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்தி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கூறுகையில், எப்பொழுதுமே திரைப்படங்கள் நிறைவு பெற்ற பின் காஞ்சி பெரியவர் மற்றும் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசிப்பது வழக்கம் அவ்வகையில் தற்போது இரண்டு திரைப்படங்கள் நிறைவு வெளியாக உள்ள நிலையில் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்ததாகவும், கடந்த சில மாதங்களாகவே என்னுடைய தொண்டு நிறுவனத்திற்கு எந்த வித பணப் பரிமாற்றம் ரசிகர்கள் மற்றும் நல்லுள்ளம் கொண்டோர் ஆகியோரை செய்ய வேண்டாம் என கூறிவந்த நிலையில், அது அவர்களிடம் சரிவர சென்றடைவேன் என்பதால் நேற்று இதுகுறித்த வீடியோ வெளியிட்டேன்.
இதில் வேற ஒன்று இல்லை எனவும், திருக்கோயிலுக்கு வந்ததால் பிற விஷயங்களை பேச வேண்டாம் என மறுத்து உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்..
No comments
Thank you for your comments