Breaking News

படிக்கட்டில் ஆபத்தான நிலையில் மாணவர்கள்பயணம்... ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

காஞ்சிபுரம் :

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் மாணவ மாணவிகள் பள்ளிக்கு பேருந்துகளில் சென்று வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அதிக அளவில் படிக்கட்டுகளில் பயணிப்பதை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது தொடர்பாக கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இன்று (31.08.2023) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  காஞ்சிபுரம் - உத்திரமேரூர், காஞ்சிபுரம - பெருநகர், காஞ்சிபுரம் - கூத்திரம்பாக்கம், காஞ்சிபுரம் - பனப்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் மாணவ, மாணவியர்கள் அதிகளவில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  மற்றும்  காவல் கண்காணிப்பாளர்  மருத்துவர் ம.சுதாகர், ஆகியோர் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, காவல்துறை மற்றும் மாநகராட்சி துறை அலுவர்கள் ஆகியோர் முன்னிலையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பேருந்து நிலையத்தில் மாணவர்களை முறைப்படுத்தி பேருந்தில் ஏற்ற பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், பள்ளி தலைமை ஆசிரியர் அம்மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து தகுந்த அறிவுரை வழங்கி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம். 

No comments

Thank you for your comments